மனிதனிடம் உள்ள சுயநலத்தை வெளியேற்றினால், மறுபக்கம் வழியாக இறைவன் நுழைகிறான். சுயநலம் அகன்றுவிட்டால் இறைவன் மட்டுமே இதயத்தில் இருப்பான்.
விக்கிரகத்தை கடவுள் என்று கூறலாம். கடவுளையே விக்கிரகமாக நினைக்கும் தவறைத் தவிர்க்க வேண்டும்.
நாமே நமக்கு சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம். நரகத்தில் கூட சொர்க்கத்தை உருவாக்க நம்மால் முடியும்.
நாம் அன்பிற்காகக் கடவுளை அன்பு செய்ய வேண்டும். கடமைக்காகக் கடமை செய்ய வேண்டும்.
நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, பிறர் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கு உதவி செய்வது தான்.
இறைவன் தன்னை நன்றாக மறைத்துக் கொண்டு, மகத்தான செயல்களில் ஈடுபடுகிறான். அதேபோல் ஒருவன் தன்னை மறைத்துக் கொண்டு (தன் செயல்பாடுகளைப் பற்றி பெருமையடிக்காமல்) செயல்பட்டால் உலகில் சாதிக்க முடியும்.
No comments:
Post a Comment